ஈரோடு பெரியவலசு அருகே சாக்கடையில் கிடந்த பெண்ணின் உடலால் பரபரப்பு
பைல் படம்.
ஈரோடு பெரியவலசு அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் முதல் வீதியில் சாக்கடை உள்ளது. இன்று காலை அந்த சாக்கடையில் திடீரென அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் செல்லாமல் தேங்கி நின்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சியில் புகார் அளித்தனர். அதன்பேரில் மாநகராட்சியில் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாக்கடையில் இருந்த அடைப்புகளை அகற்றினர். அப்போது சுமார் 45 மதிக்கத்தக்க பெண்ணின் உடல் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் பச்சை கலர் சேலை அணிந்து இருந்தார். போலீசார் விசாரணையில் இறந்த பெண்ணின் அடையாளம் தெரிய வந்தது.
இறந்த பெண் நாராயண வலசு பகுதியைச் சேர்ந்த சித்தையன் என்பவரது மனைவி சாந்தி (வயது 46) என தெரியவந்தது. சித்தையன் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து சாந்தி அண்ணன் தங்கராஜ் என்பவர் வீட்டில் இருந்து வந்தார். இவர் ஹோட்டலில் வேலை செய்து வந்தான். சாந்திக்கு அடிக்கடி வலிப்பு வரும். இந்நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. சாந்தி அதே பகுதியில் உள்ள ஒரு சாக்கடை திண்டு அருகே அமைந்திருந்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டு சாக்கடையில் தலைகுப்புற தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu