மழை வரட்டும்... ஆனால்? பதைபதைப்பில் ஈரோடு மக்கள்!
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் முழுக்க மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மழை பெய்வது பிரச்னை இல்லை சூட்டைக் கிளப்பிவிட்டு போய்விடுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.
தமிழகத்தில் சில இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வரும் நாட்களிலும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகின்றது. ஆனாலும் வெப்பம் மெல்ல மெல்ல அதிகரித்தே வருகிறது. பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய வெப்பம் இப்போது அதிகரித்து 101 டிகிரிக்கும் அதிகமாக பல இடங்களில் பின்னி பெடலெடுத்து வருகிறது.
குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மிக அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. இரண்டு தினங்களிலும் வெயில் 100 டிகிரியைத் தாண்டி அடித்துள்ளது. இதனால் வரும் காலங்களிலும் வெப்பம் மெல்ல மெல்ல அதிகரித்து மிகத் தீவிரமான கோடைக் காலத்தை இந்த முறை நாம் எதிர்கொள்ள போகிறோம் என்பதற்கான சான்றாக அமைந்து வருகிறது.
வல்லுநர்களும் உலகின் பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வருவதை அடிக்கடி எச்சரித்து வருகின்றனர். தொழிற்சாலைகளும், வாகனங்களும் அதிகரித்து வரும் சூழலில் தமிழகத்தின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான ஈரோட்டில் வெயில் வாட்டி வதைக்கிறது.
இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் வெயில் அதிகமாக இருந்தாலும் மழைக்கான வாய்ப்பும் இருப்பதாக அறிவித்துள்ளது. மதிய நேரங்களில் அதிக வெயில் அடித்தாலும் மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
பேரையூர், காரியகோவில், மரண்டப்பள்ளி, சூளகிரி, சூலூர், சின்னக்கல்லார், ஏற்காடு, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. ஆனால் இதன் காரணமாக வெப்பம் குறைந்ததா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது. ஈரோட்டில் அதிகமாக இருந்த வெயில் இன்று சற்று குறைந்துள்ளது.
ஆனால் மழை அதிகமாக பெய்யாமல் சற்று தூரல்களோடு நின்றுவிட்டால் இருக்கும் சூட்டையும் கிளப்பிவிடுமே எனும் அச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள். சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu