ஈரோடு வடக்கு மாவட்டம் சீனாபுரம் சிவன் கோவிலை காணவில்லை- சுவரொட்டியால் பரபரப்பு

ஈரோடு வடக்கு மாவட்டம் சீனாபுரம் சிவன் கோவிலை காணவில்லை- சுவரொட்டியால் பரபரப்பு
X

சீனாபுரம் சிவன் கோவிலை காணவில்லை சுவரொட்டி

பெருந்துறை பகுதியில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த சீனாபுரம் சிவன் கோயிலை காணவில்லை என பாஜக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

ஈரோடு வடக்கு மாவட்டம் பெருந்துறை ஒன்றியத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த சீனாபுரம் சிவன் கோயிலை காணவில்லை என பாஜக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

ஈரோடு வடக்கு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம், சீனாபுரம் சிவன் கோவில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தரக்கோரி, தாசில்தார், இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம், ஈரோடு வடக்கு மாவட்ட, பா.ஜ., இளைஞரணி பொதுச் செயலாளர் சசிதயாள் மனு கொடுத்திருந்தார்.

அதன்படி கடந்த, 21 ம் தேதி , தாசில்தார் கார்த்திக், இன்ஸ்பெக்டர் தங்கம், ஆர்.ஐ. ரமேஷ், சீனாபுரம் வி.ஏ.ஓ., ரத்தினசாமி ஆகியோர், சீனாபுரம் சிவன் கோவில் இடத்தை நேரில் வந்து பார்வையிட்டனர். இந்நிலையில் பெருந்துறை ஆர்.ஐ. ரமேஷ், வி.ஏ.ஓ., ரத்தினசாமி, தலைமை சர்வேயர் வினோத், சர்வேயர் குணசேகர் மற்றும் சர்வே குழுவினர், ஹைவேஸ் டிபார்ட்மென்டை சேர்ந்த ஆர்.ஐ.க்கள் துவார்நாத், மாதேஸ்வரன் ஆகியோர், கோவில் இடத்தின் அளவை அளந்து காட்டினர். இன்று அதற்குண்டான ஆவணங்களை தருவதாக கூறி சென்றனர்.

இந்நிலையில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த சீனாபுரம் சிவன் கோயிலை காணவில்லை. கோவிலை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் சிவன் சொத்து குல நாசம் எனவும் இளைஞரணி பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் பட்டகரன் சசிதயாள் என்பவர் ஈரோடு வடக்கு மாவட்டம் பெருந்துறை முழுவதும் சுவரொட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!