பேச்சுவார்த்தைக்கு பின் 'ஈரோடு கிறிஸ்டியன் காலேஜ்' போர்டு அகற்றம்..!

ஈரோடு:
மீனாட்சிசுந்தரனார் சாலையில் பெரிய மாரியம்மன் கோவில் அருகே, சி.எஸ்.ஐ., ஆண்கள் பள்ளி அருகே, சி.எஸ்.ஐ., நிர்வாகத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் உள்ளது. இதனை, மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட தாசில்தார் தலைமையிலான கமிட்டியினர், ஆக்கிரமிப்பு நிலம் என உறுதி செய்து ஆணையிட்டனர்.
இந்நிலையில், ஆக்கிரமிப்பு நிலம் என அறிவிக்கப்பட்ட இடத்தில், 'ஈரோடு கிறிஸ்டியன் காலேஜ்' என பெயர் பலகை, லோகோ போன்றவை ஒளிரும் வகையில் அமைத்தனர். இச்செயல்பாடு சட்ட விரோதமானது என்றும் இதை அகற்ற தவறினால் இன்று மாலை, 4:30 மணிக்கு ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கம் சார்பில் அறிவிப்பு செய்தனர்.
மேலும், வளாகத்தில் இருந்து மரங்களையும் நிர்வாகம் வெட்டி அகற்றி உள்ளனர். இதுபற்றியும் நடவடிக்கை எடுக்க கோரினர். இந்நிலையில் நேற்று ஈரோடு ஆர்.டி.ஓ., ரவி தலைமையில் இரு தரப்பினரை அழைத்து நடந்த பேச்சுவார்த்தையில் 'சர்ச்சைக்குரிய அந்த போர்டை' அகற்ற ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று மாலை, பெயர், லோகோவுடன் கூடிய கல்லுாரிக்கான போர்டை அகற்றி கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu