ஆம்புலன்ஸை வழிமறித்த காட்டு யானைகளால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

X
By - jananim |27 Feb 2025 12:50 PM IST
சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் அருகே ஆம்புலன்ஸை வழிமறித்த யானைகளால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு : சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் அருகே ஆம்புலன்ஸை வழிமறித்த யானைகளால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், ஆசனூா் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. கோடைக்காலம் என்பதால் வனவிலங்குகள் குடிநீா், தீவனம் தேடி அலைகின்றன. இந்நிலையில் செம்மண்திட்டு அருகே அதிகாலை வனப் பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் அவ்வழியாக சென்ற ஆம்புலன்ஸை வழிமறித்தன.
அந்த யானைகள் சாலையில் முகாமிட்டு தீவனம் உட்கொண்டது. யானைகள் நகராமல் அதே இடத்தில் நடமாடிக்கொண்டிருந்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து யானைகள் காட்டுக்குள் சென்றபின் ஆம்புலன்ஸ் சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டு சென்றது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu