கோபி அரசு டவுன் பஸ்களில் கதவு பொருத்தம்

அரசு டவுன் பஸ்களில் கதவு பொருத்தம் படிக்கட்டு பயணத்துக்கு முற்றுப்புள்ளி
கோபி பஸ் நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 37 டவுன் பஸ்களும், 46 புறநகர் பஸ்களும் இயக்கப்படுகின்றன. 2021ல் துவங்கிய தமிழக அரசின் மகளிர் இலவச பயண திட்டத்தால், அரசு டவுன் பஸ்களில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் கூட்டம் பெருகி, படிக்கட்டில் நின்றும், தொங்கியபடியும் பயணிக்கும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் அபாயகரமான முறையில் பயணிப்பதால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த படிக்கட்டு பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கோபி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டவுன் பஸ்களில் இரு வழிகளிலும் கதவு பொருத்தும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுவரை அரசு டவுன் பஸ்களில் 90 சதவீதம் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu