மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்

சர்ச்சை ஏற்படுத்திய பேச்சு, தி.மு.க. சார்பில் மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய அமைச்சரை கண்டித்து தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள ஜவான் பவன் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பார்லிமென்ட் கூட்டத்தில் தி.மு.க. அரசு குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய பேச்சு நேற்று சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மாநகர செயலர் சுப்பிரமணியம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை மேயர் செல்வராஜ், பகுதி செயலர்கள் ராமசந்திரன், சந்துரு, நடராஜன், மண்டல தலைவர் தண்டபாணி, பி.கே.பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மணிராசு, திண்டல் குமாரசாமி, குமாரவடிவேல் உள்ளிட்ட பல முக்கிய தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai solutions for small business