ஈரோட்டில் தி. மு. க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் உரையாற்றுவதற்காக கவர்னர் ரவி வந்தார். அப்போது தேசிய கீதத்தை முதலில் பாடவில்லை என்று குற்றம் சாட்டி சட்டசபையில் இருந்து வெளியேறினார். மேலும் கவர்னர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட சமூக வலைத்தளப்பதிவில் சட்டசபை நடவடிக்கைகள் அவசர காலத்தை நினைவூட்டுவதாகவும் விமர்சித்து இருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட காட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கவர்னர் மீது தொடரும் எதிர்ப்பு
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் கவர்னரை கண்டித்தும், கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தி. மு. க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஈரோட்டில் காண்டன ஆர்ப்பாட்டம்
அதன்படி ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட தி. மு. க சார்பில் ஒருங்கிணைந்து இன்று காலை காளை மாட்டு சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தி. மு. க. வினர் கலந்து கொண்டு கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கவர்னரின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி
கடந்த சில மாதங்களாக கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகிறது. குறிப்பாக தமிழக சட்டசபையின் உரிமைகள் மற்றும் தன்மானத்தை பாதிக்கும் வகையில் கவர்னர் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.
அரசியல் கட்சிகளின் கருத்து
கவர்னரின் இந்த நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழக உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும், மத்திய அரசு கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu