பவானிசாகர் அணையின் இன்றைய நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய  நிலவரம்
X
பவானி சாகர் அணை.
தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 500 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து 2,300 கன அடி நீரும் திறப்பு.

பவானிசாகர் அணியின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணை தொடர்ந்து 104 அடியில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 103 அடியாக குறைந்தது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 103. 72 அடியாக உள்ளது. அணைக்கு 698 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 500 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து 2,300 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!