பவானியில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதம்

பவானியில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதம்
X

தீயில் கருகி சேதமடைந்த குடிசை வீடு.

சிலிண்டரில் இணைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சன்யாசிபட்டி காலனி பகுதியைச் சார்ந்தவர் மாறன் என்பவரின் மகன் கண்ணன் 60. கூலித் தொழிலாளியான இவர் இன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மதியம் 1 மணியளவில் அவரது மனைவி பவளாயி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது சிலிண்டரில் இணைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது. அப்போது சாமர்த்தியமாக செயல்பட்ட பவளாயி உடனே கேஸ் இணைப்பை துண்டித்தார். ஆனாலும் வீட்டின் கூரையில் பிடித்த தீ மளமளவென்று பற்றியது. இதனால் வீட்டில் இருந்த மிக்ஸி, கிரைண்டர், டிவி மற்றும் உடைமைகள் உள்பட அனைத்தும் தீயில் எரிந்தது தகவல் அறிந்த பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் சம்பவ இடத்துக்குச் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் வீடு முழுவதும் எரிந்து சேதமானது. சேத மதிப்பு சுமார் 20 ஆயிரம் என கூறப்படுகிறது.

Tags

Next Story
ai in agriculture india