சாயக்கழிவுகளால் நஞ்சாகும் காவிரி

சாயக்கழிவுகளால் நஞ்சாகும் காவிரி
X
காவிரியை மீட்டெடுக்க விரைவான நடவடிக்கை தேவை, 11 ஆண்டுகளாக முடங்கிய சுத்திகரிப்பு திட்டம்

கழிவுநீரால் நஞ்சாகும் காவிரியாறு: 11 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சுத்திகரிப்பு நிலையத் திட்டம்

சாயக்கழிவுகளால் மாசடைந்து வரும் காவிரியாற்றை மீட்டெடுக்க 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பொது சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் 300-க்கும் மேற்பட்ட துணி சாயமிடும் தொழிற்சாலைகள், 100 பிளீச்சிங் பட்டறைகள், 800 துணி சாயத் தொழிற்சாலைகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் காவிரி, பவானி ஆறுகள் மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் வழியாக குடிநீர் மற்றும் பாசன நீராக விநியோகிக்கப்படுகின்றன.

கடந்த 2014-ஆம் ஆண்டில் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ரூ.700 கோடி செலவில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் 11 ஆண்டுகள் கடந்தும் இத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

"காலிங்கராயன் வாய்க்கால் கட்டப்பட்டு 750 ஆண்டுகள் ஆகின்றன. ஆண்டுக்கு மூன்று போகம் விளையக்கூடிய பாசனப் பகுதியானது தற்போது சாயக்கழிவுகளை சுமந்து கொண்டுள்ளது," என்று காலிங்கராயன் பாசன சபை தலைவர் வி.எம்.வேலாயுதம் கவலை தெரிவித்துள்ளார்.

20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள காவிரி ஆற்றினை மாசுபாட்டிலிருந்து காப்பாற்ற, அரசு அறிவித்துள்ள பொது சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story