நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
X

கொலை செய்யப்பட்ட பாட்டி கௌரி மற்றும் பேரன் கோபிநாத்.

சித்தோட்டில் நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஈரோடு மாவட்டம் சித்தோடை சேர்ந்த கௌரி என்பவரை அவரது பேரன் கோபிநாத் என்பவர் கொலை செய்து அவர் அணிந்திருந்த 3.5 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து சித்தோடு காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கோபிநாத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார். மேலும் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட விஜயனை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார்.

Tags

Next Story
ai based healthcare startups in india