சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டுத்தீ

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டது; இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பண்ணாரி மேற்கு பகுதி, தலமலை, காளிதிம்பம், கெஜலட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில் திடீரென காட்டு தீ எறிய தொடங்கியது. சிறிது நேரத்தில் காட்டுத்தீ மளமளவென பரவி சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு நீடித்து எறிய தொடங்கியது.

இதனால் இந்த வனப்பகுதி முழுவதும் ஒரே புகைமண்டலமாக காட்சி அளித்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து சென்றனர். மேலும் தீப்பற்றிய வனப்பகுதி அடர்ந்த வனத்திற்குள் உள்ளதால் கிராம மக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆனாலும் கட்டுக்கடங்காமல் காட்டுதீ அடுத்தடுத்து தொடர்ந்து பரவி எரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் அப்பகுதிகளில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!