ஆசனூரில் மழைச்சாரலை ரசித்தப்படி உலா வரும் காட்டு யானைகள்

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் பகுதியில், ஹாயாக மழைச்சாரலில் தங்களது குட்டிகளுடன் காட்டு யானைகள் உலா வருகின்றன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள், மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு காட்டு மிருகங்கள் வாழ்கின்றன. கடந்த நான்கு நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஆசனூர் வனப்பகுதியில் விட்டு விட்டு இதமான சாரல் மழை பெய்து கொண்டிருக்கின்றது. இதனால், செடி கொடிகள் பச்சை பசேலென பசுமையாக காட்சி அளிக்கின்றது.

இந்நிலையில் ஆசனூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் தஙகளது குட்டிகளுடன் கூட்டமாக மழைச்சாரலில் நடந்து வந்தன. பின்னர் யானை கூட்டம் மெதுவாக நடந்து சாலையை கடந்து மீண்டும் காட்டுப்பகுதிக்குள் சென்றது. இதனை ஆச்சர்யத்துடன் பார்த்த பொதுமக்கள், ஆபத்தை உணராமல், தங்களது செல்போன்களில் படம் எடுத்து கொண்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனவிலங்குகள் ஆங்காங்கே காட்டை விட்டு வெளியேறுவது வாடிக்கையாக உளாளது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வனவிலஙகுகள் அருகே செல்வது படம் பிடிப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற இடஙகளில் வாகனங்களை நிறுத்த கூடாது என்று எச்சரித்தனர்.

Tags

Next Story