பவானிசாகர் அணை பூங்காவின் சுற்றுச்சுவர் மற்றும் இரும்புக்கதவுகள் சேதப்படுத்திய காட்டு யானைகள்.

பவானிசாகர் அணை பூங்காவின் உள்ளே நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள் பூஙகாவின் சுற்றுச்சுவர் மற்றும் இரும்புக்கதவுகளை சேதப்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக காட்டு யானைகள் நீர் அருந்துவதற்காக அருகேயுள்ள பவானிசாகர் அணைக்கு வருவது வழக்கம். இதேபோல் நேற்றிரவு பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு காட்டு யானைகள் கூட்டமாக வந்துள்ளது. அப்போது வாய்க்கால் வழியாக பவானிசாகர் அணை பூங்காவிற்குள் நுழைந்தது.

இதையடுத்து பூங்காவிலிருந்து வெளியே முயன்ற யானைகள் பூங்காவின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவின் இரும்புக் கதவுகளை சேதப்படுத்தியுள்ளது. இதனை கண்ட பூங்காவில் இருக்கும் இரவு நேர பொதுப்பணித்துறை பணியாளர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். மொத்தம் நான்கு இடங்களில் சுற்றுச்சுவர் மற்றும் இரும்புக்கதவுகளை துவம்சம் செய்தது. பிறகு பவானிசாகர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் யானை பூங்காவில் நுழையாதவாறு வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!