தினமும் வழிமறிக்கும் யானை... வாகன ஓட்டிகளுக்கு ரோதனை!

தினமும் வழிமறிக்கும் யானை...  வாகன ஓட்டிகளுக்கு ரோதனை!
X
ஆசனூர் அருகே தொடர்ந்து வாகனங்களை வழிமறித்து நிற்கும் காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், சாலையோரம் முகாமிட்டு வருகின்றன.

இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையான ஆசனூர் அரேப்பாளையம் பிரிவில் உள்ள சாலையில், சுமார் அரை மணி நேரம் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டு வாகனங்களை வழிமறித்து நின்றது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் தற்போது கோடைகாலம் என்பதால் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நடமாடும் எனவும் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் பயணிக்குமாறும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!