சத்தியமங்கலம் அருகே சாலையில் காட்டெருமை, யானைகள் உலா: வனத்துறை அலர்ட்

திம்பம் மலைப்பாதையில், யானை, காட்டெருமைகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான மான், யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மழை பெய்து, மலைப்பகுதி முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது.

இந்நிலையில் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையான திம்பம் மலைப்பாதையின் முதலாவது கொண்டு ஊசி வளைவில் காட்டை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை மற்றும் காட்டெருமை நிற்கின்றன. இந்த வனவிலங்குகள் சாலையோரம் உள்ள தீவனத்தை உட்கொண்டு, நடமாடிக் கொண்டுள்ளன.

இதனை அவ்வழியாக செல்லும் வவாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் படம் பிடித்து செல்கின்றனர். இவ்வாறு அடிக்கடி வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறுவதால் மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அதிக கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!