தக்காளி லோடு ஏற்றி வந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

சத்தியமங்கலம் அருகே, தக்காளி லோடு ஏற்றி வந்த வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கர்நாடக மாநிலம் சிக்கோலா பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு, திம்பம் மலைப்பாதை வழியாக தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு பிக்கப் வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகபுதூர் கிராமம் அருகே வேன் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.‌
இந்த விபத்தில், சுமார் 200 கிலோ தக்காளிகள் சேதமடைந்தன. தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர், பள்ளத்தில் கவிழ்ந்த வாகனத்தை கிரேன் மூலம் மீட்டனர். இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!