திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததில் மரகட்டைகள் ரோட்டில் சிதறி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி வழியாக கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் திம்பம் மலைப்பாதை, 27 அபாயகரமான கொண்டைஊசி வளைவுகள் கொண்டது. திம்பம் மலைப்பாதை வழியாக தினமும் 24 மணி நேரமும் வாகனப்போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மரம் லோடு ஏற்றி கொண்டு வந்த 12 சக்கர லாரி ஒன்று, 6வது கொண்டைஊசி வளைவில் திரும்பும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாரதவிதமாக ரோட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதனால், லாரியில் இருந்த மரக்கட்டைகள் ரோட்டில் சிதறியதில் போக்குவரத்து பாதிப்புக்கப்பட்டது. சுமார் 3 மணிநேரமாக பெரிய வாகனங்கள் செல்ல முடியாமல் மலைப்பாதையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. போலீஸார் சம்பவயிடத்திற்கு சென்று வேறு ஒரு லாரியில் மரக்கட்டைகளை ஏற்றி கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தியதை அடுத்து போக்குவரத்து சீரானது.

Tags

Next Story
ai future project