101 அடியை எட்டிய பவானிசாகர் அணையின் நீர்மட்டம்

101 அடியை எட்டிய பவானிசாகர் அணையின் நீர்மட்டம்
X

கடல் போல் காட்சியளிக்கும் பவானிசாகர் அணை. 

நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக பவானிசாகர் அணை 101 அடியை எட்டியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 24 நாட்களுக்கு மேலாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடியில் இருந்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதியில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சுமார் 23 நாட்களாக 100 அடியில் இருந்து வந்த பவானிசாகர் அணை இன்று 101 அடியை எட்டி உள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 101.15 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 617 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடியும் என மொத்தம் 600 கனஅடி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story