சத்தியமங்கலம் அருகே பழமை வாய்ந்த கோவிலில் கொள்ளை

சத்தியமங்கலம் அருகே பழமை வாய்ந்த கோவிலில் கொள்ளை
X

ஒங்கன்புரம் கிராமத்தில் உள்ள  சாமுண்டீஸ்வரி கோவிலில் கொள்ளை போனது தொடர்பாக,  கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர்.

சத்தியமங்கலம் அருகே, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி ஒங்கன்புரம் கிராமத்தில், லிங்காயத்து சமுதாய மக்கள் வணங்கி வரும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மரக்கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இன்று, வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பூசாரி உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, தாளவாடி காவல்நியைத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்வ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு‌ தடயங்களை சேகரித்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கோவில் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பறி, ஆய்வு ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!