துணை இராணுவத்தினருடன் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை

துணை இராணுவத்தினருடன் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை
X
பணப்பட்டுவாடாவை தவிர்க சத்தியமங்கலம் பகுதியில் துணை இராணுவத்தினருடன் இணைந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் வாக்குக்கு பணம் கொடுப்பவர்களை கண்காணிக்கும் வகையில் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தவிர்க்கவும் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திண்டுக்கல் மைசூரு தேசிய நெடுஞ்சாலை எஸ்.ஆர்.டி கார்னர் பகுதியில் காவல்துறையினர் துணை இராணுவத்தினருடன் இணைந்து கர்நாடகா மற்றும் கோவையிலிருந்து வரும் நான்கு சக்கர வாகனம், பேருந்து, லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களை தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
future of ai in retail