கடமானை வேட்டையாடிய 3 பேர் கைது

கடமானை வேட்டையாடிய 3 பேர் கைது
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடமானை வேட்டையாடிய மூன்று நபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வடவள்ளி வனப்பகுதி அருகே உள்ள செம்மன்குட்டை என்ற இடத்தில் வனத்துறையினர் ரோந்து சென்றுள்ளனர். அப்போது வனப்பகுதிக்குள் 5 பேர் சுற்றித் திரிந்ததை கண்ட வனத்துறையினர் அவர்களைப் பிடிக்க முற்பட்டபோது அதில் 2 பேர் தப்பி ஓடியுள்ளனர். பிடிபட்ட மூவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மூவரும் சத்தியமங்கலம் அருகே உள்ள ராமபைலூர் தொட்டியை சேர்ந்த ரங்கசாமி, நாராயணன், திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த பழனிச்சாமி என்பதும் இவர்கள் வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சிறிய குழி தோண்டி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் யூரியா உப்பு கலந்த தண்ணீரை குழிக்குள் ஊற்றி கடமானை வேட்டையாடியது தெரியவந்தது. உடனடியாக அவரிடம் இருந்த இரண்டு கத்தி மற்றும் அவர்கள் வேட்டையாடிய கடமான் உடலை கைப்பற்றிய சத்தியமங்கலம் வனத்துறையினர் அவர்களை கைது செய்து தப்பியோடிய சதீஷ், மூர்த்தி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!