/* */

பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

HIGHLIGHTS

பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
X

பைல் படம்.

சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா மிகவும் விமர்சையாக நடந்து வருகிறது. இந்த விழாவில் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள்.

இதையொட்டி சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்தநிலையில் இந்தாண்டுக்கான குண்டம் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதையொட்டி பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நட வடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய்துறை, போலீஸ், வனத்துறை, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, போக்கு வரத்துதுறை உட்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி, கண்காணிப்பு கோபுரம் அமைப்பது, வாகப் போக்குவரத்தை திருப்பி விடுவது, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, குண்டம் இறங்கும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் செய்து தருவது உட்பட பல்வேறு பாதுகாப்புகள் குறித்து விவாதிக்க ப்பட்டது. இக்கூட்டத்தில் சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி. ஐமன் ஜமால், தாசில்தார் சங்கர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 March 2023 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க