பவானிசாகர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் இன்று முதல் நிறுத்தம்

பவானிசாகர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் இன்று முதல் நிறுத்தம்
X

பைல் படம்.

பவானிசாகர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் இன்று முதல் நிறுத்தப்படுவதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு ,திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பல லட்சம் விவசாய விளை நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் பவானி ஆற்றில் 9 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தடப்பள்ளி -அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில், பவானி சாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 29 -வது முறையாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பை கருதி அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே பவானி ஆற்று வழியாக திறந்து விடப்பட்டது.

நேற்றுவரை அணைக்கு வருகின்ற உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்ட நிலையில், இன்று காலை முதல் அணையில் தண்ணீரை தேக்கி வைக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி பவானிசாகர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் இன்று நிறுத்தப்பட்டது. அணையில் தற்போது 28.82 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது.

Tags

Next Story
Will AI Replace Web Developers