சத்தியமங்கலம் அருகே சாலை ஓரத்தில் சிறுத்தை : வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம் அருகே சாலை ஓரத்தில் சிறுத்தை : வாகன ஓட்டிகள் அச்சம்
X

சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரியும் சிறுத்தை.

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் சிறுத்தை இருந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக அமைந்துள்ளது. இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சிறுத்தைப்புலி ஒன்று நடமாடியதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

காரில் வந்த பயணி ஒருவர் தனது செல்போனில் சிறுத்தை நடமாட்டத்தை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளிட்டுள்ளார். இவ்வாறு வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்