பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி
X

பவானி சாகர் அணையில் 96.37 அடியாக உயர்ந்த நீர்மட்டம்.

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு வரும் நீர்வரத்து 619 கனஅடியாக இருந்த நிலையில் இன்று 4867 கன அடி அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பதன் காரணமாக அணையின் நீர்மட்டம் ‌96.37 அடியாகவும், நீர் இருப்பு 25.9 டி எம் சி ஆகவும் ஆகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கனஅடி நீர் மற்றும் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்காக 600 கனஅடி நீர் என மொத்தம் 800 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!