சட்ட விரோதமாக மது விற்பனை: 345 பாட்டில்களுடன் பெண் கைது

சட்ட விரோதமாக மது விற்பனை: 345 பாட்டில்களுடன் பெண் கைது
X

இன்று முழு ஊரடங்கையொட்டி ஈரோடு மாவட்டத்திலுள்ள பால் மற்றும் மருந்துக்கடைகள் என அத்யாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர்த்து தேனீர் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், மளிகைக் கடைகள், டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிபர்களை கண்காணிக்க காவல்துறையினர் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடவள்ளி மெயின் ரோட்டில் உள்ள ஒரு கோழி கறிகடையில் மதுவிற்பனை செய்யப்படுவதாக தகவல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் கறிகடையில் பதுக்கி வைத்திருந்த

180 ML அளவு கொண்ட 240 மதுபாட்டில்கள், 375 ML கொண்ட 5 மதுபாட்டில்கள் என மொத்தம் 245 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் அரசு மதுபானத்தை கள்ள தனமாக விற்பனைக்கு வைத்திருந்தாக சுந்தரா (55) என்பவர் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். ஊரடங்கின் போது சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்