தாளவாடியில் கனமழை மகிழ்ச்சியில் விவசாயிகள், பொதுமக்கள்

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்..

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினஙகளாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டது. சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் சிமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் இன்று காலை முதலே மிதமான வெப்பம் வாட்டி வந்த நிலையில் திடீரென மழை பெய்ய துவங்கியது.

லேசான சாரலுடன் பெய்ய தொடங்கிய மழை பின்னர் கனமழையாக மாறியது. சுமார் ஒரு மணி நேரம் விடாமல் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதோடு அப்பகுதி முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவானது.இன்று பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!