சத்தியமங்கலம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய 2 பேர் கைது

சத்தியமங்கலம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய 2 பேர் கைது
X

சத்தியமங்கலம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்

சத்தியமங்கலம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கெம்பநாயக்கன்பாளையம் வனப்பகுதி அருகே சத்தியமங்கலம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரும்பள்ளம் அணை அருகே நாட்டு துப்பாக்கியோடு இருவர் சுற்றித் திரிந்ததை கண்ட வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது அவர்கள் இருவரும் கே.என்.பாளையம் அருகே உள்ள நரசாபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ், கருப்புசாமி என்பதும் இவர்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக அவர்களை கைது செய்த சத்தியமங்கலம் வனத்துறையினர் நாட்டு துப்பாக்கியை கைப்பற்றினர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!