சத்தியமங்கலம் அருகே வாகனம் மோதி பெண் சிறுத்தை உயிரிழப்பு

சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் சிறுத்தை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் திம்பம் மலைப்பாதை, 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது. இந்த மலைப்பாதையில், 24 மணி நேரமும் கார்,சரக்கு வாகனங்கள் என வாகனப் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில், திம்பம் பகுதியில், பலத்த காயங்களுடன் சாலையில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்ப இடத்திற்கு சென்ற வனத்துறையினர், சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், சாலையை கடக்கும் போது வாகனம் மோதி சிறுத்தை இருந்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இறந்து போன சிறுத்தைக்கு 4 வயது இருக்கும் என்றும், இது பெண் சிறுத்தை என்றும் சிறுத்தை மீது மோதிய வாகனத்தை கண்டுபிடிக்க, சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!