இயற்கையின் விளையாட்டு புதிய அருவிகள் உருவான அதிசயம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கடம்பூர், மல்லியம்துர்க்கம், குன்றி, காடகநல்லி, குத்தியாலத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையால் கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் மலைப்பதையின் சாலையோரம் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மல்லியம்மன் துர்கம் கோவில் அருகே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் அணிவகுத்து நின்றது. நீண்ட நேரத்திற்கு பிறகு சாலையில் தண்ணீர் வடிந்த பிறகே வாகனங்கள் கடம்பூர் மலை கிராமத்திற்கு செல்லத் துவங்கியது. இந்த தொடர் மழையின் காரணமாக கடம்பர் மலை கிராமத்தில் ஆங்காங்கே பார்க்கும் இடமெல்லாம் திடீர் அருவிகள் தோன்றியுள்ளது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ரசித்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu