கரும்பு லாரியை வழிமறித்து கரும்பு கட்டுகளை இறக்கி சாப்பிட்ட யானை
லாரியை வழி மறித்து கரும்பு கட்டுகளை எடுக்கும் யானை.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு விலங்குகள் மற்றும் யானைகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து கரும்பு கட்டுகளை எடுத்து வருகின்றன. லாரி ஓட்டுனர்களும் யானைக்கு பயந்து கரும்புத் துண்டுகளை வனப் பகுதியின் சாலையோரம் வீசிவிட்டு யானையின் கவனம் கரும்பின் மீது திரும்பியதும் லாரியை எடுத்து செல்கின்றனர்.
கரும்புகளை சுவைத்து பழக்கப்பட்ட யானைகள் மீண்டும் அதே இடத்தில் கரும்பு கிடைக்கும் என சாலையோரம் வந்து யானைகள் நிற்கின்றன. இந்நிலையில் இதற்கிடையே ஆசனூர் காரப்பளம் சோதனைச்சாவடி அருகே குட்டியோடு சாலையில் உலா வந்த யானை சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லக்கூடிய அரசுப் பேருந்தை திடீரென வழி மறித்து நின்றது. சிறிது நேரம் பேருந்து முன்பு நின்றிருந்த யானை பேருந்தின் முன்பகுதி கண்ணாடி முன்பு வந்து தடவிப் பார்த்தது விட்டு மெதுவாக நகர்ந்து சென்றது.
பின்னர் பேருந்து ஓட்டுனர் லாவகமாக பேருந்தை மெதுவாக நகர்த்தி சென்றதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். ஆசனூர் வன சாலையோரம் கரும்புக்காக யானைகள் நின்று லாரிகளை வழிமறிப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் யானை குட்டியுடன் வந்து கொண்டிருந்த நேரத்தில் மூன்று கரும்புலாரிகள் வந்தது. உடனே லாரிகளை வழிமறித்த யானை, கரும்பு கட்டுகளை துதிக்கையால் இறக்கி தனது குட்டியுடன் சுவைக்க துவங்கியது. பின்னர் ஒரு மணி நேரம் கழித்து காட்டிற்குள் சென்ற பின்பு வாகனங்கள் பயணிக்க தொடங்கியது.
இதனால் யானைகளுக்கு கரும்பு துண்டுகளை உணவாக வழங்க வேண்டாம் என கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரி ஓட்டுனர்களை வனத்துறையினர் கண்காணித்து கடுமையாக எச்சரிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu