சிறுமியை கடத்திய கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

சிறுமியை கடத்திய கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோணமலை அண்ணாநகரை சேர்ந்தவர் செந்தில்(20). இவர் கட்டிட மேஷனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சத்தியமங்கலத்தை சேர்ந்த சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செந்தில் அச்சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி நேற்று கடத்தி சென்றுள்ளார். இதனிடையே சிறுமியை காணவில்லை என அச்சிறுமியின் பெற்றோர்கள் சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்ததில் செந்தில் அச்சிறுமியை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமாரிடம் இருந்து அச்சிறுமியை மீட்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செந்திலை கைது செய்து ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!