முதியவரை தாக்கும் நடத்துனர்

முதியவரை தாக்கும் நடத்துனர்
X
ஈரோடு அருகே சில்லரை இல்லை என்று கூறிய முதியவரை நடத்துனர் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து அரசு பேருந்து கோபிசெட்டிபாளையம் வழியாக ஈரோடு சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் நடத்துனர் சில்லறை கேட்டுள்ளார். தன்னிடம் சில்லறை இல்லை என முதியவர் கூறவே இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நடத்துனர் முதியவரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த காட்சிகளை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரியிடம் கேட்டபோது நடத்துநரை விசாரணை செய்து வருவதாகவும் உண்மை நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!