/* */

65 லட்சம் மதிப்பிலான குட்கா கடத்தல்: 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனை சாவடியில், ரகசிய தகவல் அடிப்படையில் லாரியை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த 65 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல்செய்து, மூன்று பேரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

65 லட்சம் மதிப்பிலான குட்கா கடத்தல்: 3 பேர் கைது
X

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனை சாவடியில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும், செல்லும் வாகனங்களை சோதனை செய்த பின்னர் அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி வெள்ளிக்கிழமை அதிகாலை கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா கடத்தப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையில் போலீசார் பண்ணாரி சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.


அதிகாலை 3 மணி அளவில் கர்நாடக மாநிலம், கொள்ளேகால் அருகே ஹனூரில் இருந்து பல்லடம் நோக்கி மக்காச்சோளம் லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது. போலீஸார் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சட்ட விரோதமாக மக்காச்சோளம் மூட்டைகளுக்கு அடிப்பகுதியில் குட்கா மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து குட்கா மூட்டைகள், லாரியை பறிமுதல் செய்து, கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் அருகே மார்டல்லியை சேர்ந்த டிரைவர்காந்தராஜ்(38), நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பகுதியை சேர்ந்த கீளினர் ரமேஷ்(30), பல்லடத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் சுயம்புலிங்கம்(52) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்ட குட்காவின் மதிப்பு சுமார் ரூ. 65 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் மூட்டைகளுக்கு அடிப்பகுதியில் குட்கா மறைத்து கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 22 Jan 2021 5:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  6. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  7. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  8. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  10. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!