கோழி வியாபாரியிடமிருந்து 5.50 லட்சம் பறிமுதல்

கோழி வியாபாரியிடமிருந்து 5.50 லட்சம் பறிமுதல்
X
சத்தியமங்கலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆசனூர் அரேப்பாளையம் பிரிவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தனபிரனேஷ் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மைசூர் சாலையிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் பிக்கப் வேனில் வந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் மலையாண்டல்லி பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பதும் இவர் கோழி வியாபாரம் செய்து வருவதும், கர்நாடக மாநிலம் மங்களூரில் கோழி வியாபாரம் முடித்துவிட்டு பணம் பெற்றுக்கொண்டு பல்லடம் சென்று கொண்டிருப்பதும் தெரியவந்தது. அவர் எடுத்துவந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாத காரணத்தினால் அவரிடமிருந்த 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சத்தியமங்கலம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!