மக்கள் அச்சமின்றி வாக்களிக்க சத்தியமங்கலத்தில் துணை ராணுவம் அணிவகுப்பு

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க சத்தியமங்கலத்தில் துணை ராணுவம் அணிவகுப்பு
X
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் துணை ராணுவம் அணி வகுப்பு நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் வரும் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி மக்கள் அனைவரும் அச்சமின்றி பாதுகாப்புடன் வாக்களிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா தலைமையில் காவல்துறையினர், போக்குவரத்து துறையினர், துணை ராணுவ படையினர் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலம் சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி கார்னரில் தொடங்கியது, ஆற்றுப் பாலம், மணிக்கூண்டு, கோட்டு, வீராம்பாளயம், வடக்குபேட்டை வழியாக சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிறைவடைந்தது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!