காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயம்

காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயம்
X
கடம்பூர் மலைப்பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப் பகுதியை சேர்ந்த சிவராஜ் என்பவர் மாவல்லம் பகுதியில் உள்ள ஜடைசாமி கோயிலுக்கு செல்வதற்காக கடம்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது உகினியம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் புதருக்குள் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென சிவராஜை தாக்கியுள்ளது. பின்னர் சிவராஜ் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை ஆத்திரத்தில் சேதப்படுத்தியது. இதில் முதுகு எலும்பு மற்றும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு போராடிய சிவராஜை சாலை வழியாக வந்த சிலர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து காப்பாற்றினர்.

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!