வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து எஸ்.பி ஆய்வு

வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து எஸ்.பி ஆய்வு
X
சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு உண்டான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 374 வாக்குச்சாவடி மையங்களுக்கு உண்டான 1385 வாக்கு இயந்திரங்கள் கடந்த 10ம் தேதி அனைத்து கட்சியினர் முன்னிலையில், சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டு, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை வாக்கு இயந்திரம் பாதுகாப்பு குறித்து நேரில் ஆய்வு செய்தார். பின்னர் பணியில் ஈடுபட்டு இருக்கும் காவல்துறை அதிகாரி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பையா ஆகியோரிடம் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!