தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது திமுக : எல்.முருகன்
வரும் 25ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவையில் உள்ள கொடிசியாவில் மிகப்பெரிய மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு உண்டான ஆலோசனை கூட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் எல். முருகன் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2013 - 2014 ஆண்டில் யு.பி.ஏ ஆட்சியில் கேஸ் விலை ஆயிரத்துக்கு மேல் உள்ள இருந்ததாகவும், 2014ம் ஆண்டுக்கு பிறகு பாரதி ஜனதா பொறுப்பேற்ற பின்னர் தற்போது 700 ரூபாய் மட்டுமே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பெட்ரோல்,டீசல்,கேஸ் விலை உலக சந்தையை பொருத்து அமைகிறது எனவும், இருப்பினும் அரசு இதில் கவனம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். புதுச்சேரியில் நடைபெற்ற குழப்பத்திற்கு முழுக்க முழுக்க முதலமைச்சர் நாராயணசாமியின் இயலாமையை தான் காரணம் என தெரிவித்த அவர், அதனால் தான் அவருடைய கட்சி எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ராஜினாமா செய்து விட்டு வெளியேறிவிட்டார்கள் என தெரிவித்தார். மேலும் தைப்பூசத்திற்கு நீண்ட நாட்களாக விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழர்கள் கொண்டாடும் தைப்பூசத்திற்கு விடுமுறை அளித்த முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். கவர்னரிடம் அமைச்சர்களை வைத்து ஊழல் அறிக்கை தாக்கல் செய்துள்ள திமுக தேர்தலுக்காக நாடகம் ஆடுவதாக தெரிவித்தோடு உலகளவில் மிகப்பெரிய ஊழல் செய்து தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது திராவிட முன்னேற்றக் கழகம் எனவே தயவு செய்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுடைய தவறையும் தெரிந்து கொள்ள வேண்டும் என எல்.முருகன் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu