தேர்வுகள் எப்போதும் நடைபெறும் ? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

தேர்வுகள் எப்போதும் நடைபெறும் ?  அமைச்சர் செங்கோட்டையன் பதில்
X

சட்டமன்ற பொதுத் தேர்தல் அட்டவணை வெளியிட்ட பிறகு பள்ளி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்தில் ரூ. 76.64 லட்சம் ரூபாய் மதிப்பிலான அறிவியல் ஆய்வகம் மற்றும் இயற்பியல் ஆய்வகம், பள்ளி வேளாண் கூட்டுறவு சங்க புதிய கட்டிடங்கள், குடிநீர் திட்டம், அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், வரலாற்றிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 2000 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளது எனவும் தேர்தல் ஆணையம் சட்டமன்ற பொதுத் தேர்தல் அட்டவணை வெளியிட்ட பிறகு முதலமைச்சர் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து பள்ளி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!