தண்ணீரைத் தேடி யானைகள் கூட்டமாக இறங்கி வந்தன

இருபதுக்கும் மேற்பட்ட யானைகள் தன் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணையின் மேற்பகுதியில் உள்ள சாலையை கடந்து சென்றது. பின்னர் தனது குட்டிகளை அணைத்தவாறு அணைக்குள் இறங்கி தண்ணீரை குடித்து இளைப்பாறியது, அரை மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீரில் நடந்து பிறகு மீண்டும் கரையேறி காட்டுக்குள் சென்றன. இக் காட்சியை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் தண்ணீர் இருந்தாலும் அணைக்குள் இறங்கி சென்று நீர் அருந்த ஏராளமான யானைகள் படையெடுக்க துவங்கி விட்டது. தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையோரம் நிற்பதும் சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன. இந்நிலையில் பவானிசாகர் அணையின் மேற்பகுதியில் உள்ள ஜீரோ பாயிண்ட் என்ற இடத்தில் தண்ணீரைத் தேடி சுமார் இருபதுக்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக அணையின் மேற்பகுதியில் உள்ள சாலையை கடந்து சென்றன. பின்னர் தனது குட்டிகளை அணைத்தவாறு அணைக்குள் இறங்கி தண்ணீரை குடித்து இளைப்பாறியது. அரை மணி நேரத்திற்க்கும் மேலாக தண்ணீரில் நடந்து பிறகு மீண்டும் கரையேறி காட்டுக்குள்சென்றன.

அணையின் மேற்பகுதியில் தினமும் நடமாடும் காட்டு யானைகளால் மீனவர்கள் ஆடு மேய்ப்பவர்கள் அச்சத்துடன் சென்று வந்தாலும், யானைகளின் குளியலை பார்க்க ஆவலாக பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!