அனைத்து கோயில்களிலும் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் சேகர்பாபு

அனைத்து கோயில்களிலும் காலி பணியிடங்கள்  நிரப்பப்படும் : அமைச்சர் சேகர்பாபு
X

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் உள்ள புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு நடத்தி சாமி தரிசனம் செய்தார்.

தமிழகத் திருக்கோயில்களில் உள்ள அனைத்து காலி பணியிடங்களும் முறைகேடுகள் நிகழாமல் நிரப்பப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கடந்த சில தினங்களாக ஆய்வு நடத்தி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக இன்று ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் உள்ள புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு நடத்தி சாமி தரிசனம் செய்தார்.

இதன் பின்னர் காவிரி,பவானி,அமுதநதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் புனித நீரை எடுத்து தெளித்து கொண்டார்.

இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்கள் போதுமான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

அப்போது பக்தர்கள் வழங்கப்படும் அன்னதான எண்ணிக்கை மற்றும் ஆக விதிமுறைகள் குறித்து அறநிலையத்துறையின் அலுவலரிகளிடம் கேட்டறிந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது.

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் உள்ள 47கோவில்களில் இருந்து கூடுதலாக தரம் உயரத்துவது தொடர்பாக 539கோவில்கள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 450திருகோவில்கள் தரம் உயர்த்த பரீசிலினையில் உள்ளது. இதனை முதல்வருடன் கலந்து ஆலோசித்து தரம் உயர்த்தப்படும். இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் பெரும்பாலும் பெரிய கோவில்களில் வரும் வருவாய் வைத்து சிறிய கோவில்களை நடத்தி வருவதால் அர்ச்சனை கட்டணம் நீக்கப்படுவது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசிக்கப்படும்.

இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் முறைகேடுகள் நிகழாமல் நிரப்படும்.

தகுதியான பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இதனை தெடர்ந்து ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயில், சென்னிமலை முருகன் கோயில்களில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உட்பட துறைசார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!