ஈரோடு அருகே நூல் மில்லில் தீவிபத்து : 30 லட்சம் மதிப்பிலான் பொருட்கள் சாம்பல்

ஈரோடு அருகே நூல் மில்லில் தீவிபத்து : 30 லட்சம் மதிப்பிலான் பொருட்கள் சாம்பல்
X
ஈரோடு அருகே, நூல் மில்லில் ஏற்பட்ட தீவிபத்தால் 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சாம்பலாகின.

ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் சித்தோடு அருகே உள்ள ஆட்டையாம்பாளையம் பகுதியல் நூல் மில் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நூல் மில்லில், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு நூல் மில்லை பூட்டி சென்றுள்ளனர். இதனையடுத்து நள்ளிரவில் நூல் மில்லில் தீ பற்றி எறிய தொடங்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே ஒரு இடத்தில் பற்றிய தீயானது மில் முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எறிய தொடங்கியது.

சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு, பவானி, பெருந்துறை ஆகிய 3 இடங்களை சேர்ந்த தீயணைப்பு துறையினர் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் நூல் மில்லில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து நிகழ்ந்துள்ளதாகவும் சுமார் 30 லட்சம் மதிப்பிலான நூல்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவைகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நூல் மில்லில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture