நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்கள் : டிடிவி தினகரன்

நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்கள் : டிடிவி தினகரன்
X
ஈரோடு மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் பிரச்சாரம்.

வரும் சட்டமன்ற தேர்தலில அமமுக மற்றும் தேமுதிக கூட்டணி சார்பில் ஈரோடு மாவட்டத்தில் பேட்டியிடும் டேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நசியனூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,

கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தின் கஜானாவை காலி செய்து, 6 லட்சம் கோடி கடனில் தள்ளாட வைத்துள்ளனர். அதிமுகவினர் பண மூட்டையை நம்பி தேர்தலில் நிற்கின்றனர். ஆடு,மாடுகளை விலைக்கு வாங்குவதுபோல், வாக்குகளை வாங்க அமைச்சர்கள் ரூ 300 கோடி வரை செலவழிக்கவுள்ளனர். மற்ற தொகுதிகளில் ரூ 50 கோடிக்கு குறைவில்லாமல் செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மக்களின் வரிப்பணம் உங்களிடம் வருவதால் வாங்கிக் கொள்ளுங்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்குக்கு 10 ஆயிரம் கொடுத்தார்கள். ஆனால், வாக்காளர்கள் என்னைத்தான் வெற்றி பெற வைத்தார்கள். எனவே, மக்கள் தங்கள் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு, வாக்கினை மாற்றிப் போடுவார்கள். மக்கள் சரியான முடிவெடுப்பார்கள். தமிழன துரோக கூட்டணியை ஓட, ஓட விரட்டுவார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக இலவு காத்த கிளியாய் திமுகவினர் உள்ளனர். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்து விடாதீர்கள். ஏற்கனவே இந்த ஆட்சியாளரகள் கஜானாவை காலி செய்து வைத்து இருப்பதால், திமுகவினர் ஆட்சிக்கு வந்தால், பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடி விடுவார்கள். தீய சக்தியையும், துரோக சக்தியையும் ஆட்சிக்கு வர விடாமல் செய்ய வேண்டும்.

அதிமுக அறிவித்துள்ள இலவச திட்டங்களைச் செயல்படுத்த மாதம் 5000 கோடி வேண்டும். மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதால் இலவசங்களை அறிவித்து ஏமாற்றுகின்றனர். ஆனால், அமமுக தேர்தல் அறிக்கையில் நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களை மட்டும் அறிவித்துள்ளோம்.

இலவசங்களைக் கொடுத்து ஏமாற்றியது போதும். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுத்தால் தமிழகம் முன்னேறும். அமமுக ஆட்சிக்கு வந்தால், மீத்தேன், ஹைட்ரோ கார்ப்ன போன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டங்கள் தடுக்கப்படும். காவிரி பாயும் பகுதியின் இரு கரைகளும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும். அங்கு தொழிற்சாலைகள் அமைக்க அனுமதிக்கப்படாது. நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பொதுசுத்திகரிப்பு ஆலையம் அமைக்கப்படும். வருங்கால சந்ததியைப் பாதிக்கும் கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். நெசவாளர்களுக்கான நூல் விலையை அரசு நிர்ணயிக்கும். கமிஷன், புரோக்கர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வாருங்கள். தமிழகத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என்றார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!