பவானியில் கொரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு சீல்

பவானியில் கொரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு சீல்
X
பவானியில் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில், வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

கொரோனா தொற்று நோய் அதிக அளவில் பரவி வருகிறது. அதன் காரணத்தினால் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் கணடிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தர விட்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் மாவட்ட கலெக்டர் கதிரவன் அதிரடி சோதனையில் ஈடுபட்டர். அப்போது அந்தியூர் பிரிவு பகுதிகளிலுள்ள நகைக்கடைகள், ஹோட்டல் கடைகள் மற்றும் பாத்திர கடைகளில் சமூக இடைவெளிகள் இல்லாமலும் முககவசங்கள் இல்லாமலும் வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்தனர்.

இதனை கண்ட கலெக்டர் கதிரவன் உடனடியாக வருவாய்த்துறைனர் மூலம் சுமார் 12 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும் விதிமீறலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களுக்கு சுமார் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் இனி வரும் காலங்களில் சமூக இடைவெளி இல்லாமலும் முகக் கவசங்கள் இல்லாமல் வியாபாரம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

Tags

Next Story