பவானி நகராட்சி சார்பில் சாலையோர கொரோனா பரிசோதனை மையம்: வரமறுக்கும் பொதுமக்கள்

பவானி நகராட்சி சார்பில், சாலைகளில் அமைக்கப்படுள்ள கொரோனா பரிசோதனை மையத்திற்கு வந்து பரிசோதனை செய்ய பொதுமக்கள் தயங்குகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை பரவலை தடுக்க, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர், போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாகச்சென்று சளி,காய்ச்சல் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோல், பவானி நகராட்சி சார்பில் 10 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாகச்சென்று பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து சாலைகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு சாலைகளில் செல்வோருக்கென தனியாக தனியாக பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கென தனியாக 10 நபர்களை பவானி நகராட்சி நிர்வாகம் நியமனம் செய்துள்ளது. அதன் அடிப்படையில் முகாம் ஊழியர்கள் சாலைகளில் செல்லும் மக்களை பரிசோதனைக்கு அழைத்தால், அவர்கள் அலட்சியம் காட்டி வர மறுப்பதோடு தரக்குறைவாக பேசுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஊழியர்களில் சிலர் மிகவும் மனவேதனை அடைவதாகவும் இதற்கான மாற்று வழியை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!