ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு

ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 5 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல் மாவட்டத்தில் நோய் அதிகம் பரவக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அந்த பகுதியில் மட்டும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் 214 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பார் உடன் இயங்கக்கூடிய டாஸ்மாக் கடைகள் மட்டும் செயல்படாமல் உள்ளது. ஆனால் தனியாக உள்ள டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஈரோடு மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!