புரட்டாசி பிறப்பு : ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை மற்றும் விலை சரிவு

புரட்டாசி பிறப்பு : ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை மற்றும் விலை சரிவு
X

பவானி ஆட்டு சந்தை.

புரட்டாசி மாதம் பிறப்பையொட்டி பவானி அருகே நடைபெற்ற ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை மற்றும் விலை சரிவு.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பூதப்பாடி பகுதியில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இச்சந்தைக்கு பவானி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வாடிக்கை. இந்நிலையில் இன்று கூடிய சந்தையில், 200க்கும் குறைவான வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.மேலும் ஆடுகள் வாங்கி செல்லுவதற்காக வியாபாரிகள் பெரும் அளவில் வராததால் அதிகபட்சமாக 2ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ஆடுகள் விற்பனையானது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், புரட்டாசி மாதம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இதனால் அசைவ பிரியர்கள் பெரும்பாலானோர் சைவ உணவிற்கு மாறிவிட்டனர். இதனால் ஆடு, கோழி, மீன் போன்ற இறைச்சி கடைகளில் கூட்டம் குறைய தொடங்கியது. எனவே இன்று கூடிய சந்தைக்கு வியாபாரிகள் பெருமளவில் வரவில்லை. இதனால் அதிகபட்சமாக 2ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ஆடுகள் விற்பனையானது என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!